எண் 27/4, எம்.எஸ் காம்ப்ளக்ஸ், கே.ஆர்.ஈ. லே அவுட் , கல்லூரி சாலை, திருப்பூர் - 641 602.
+91 98430 60693/+91 98428 79560

இரத்த-தானம்

 

இரத்த தானத்தின் அவசியங்கள்:

நீங்கள் வழங்கும் இரத்தம் விலைமதிக்கமுடியாத பலரின் உயிரை காப்பாற்றும். நீங்கள் வழங்குவது உதிரம் மட்டுமல்ல ஒருவரை காக்கும் ஒரு உன்னதமான உயிர்.

 

இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்:

à  18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இரத்ததானம் செய்யலாம்.இரத்ததானம் செய்பவர்கள் எடை 5௦ க்கு மேல் இருக்க வேண்டும்.

à  நம் ஒவ்வொருவருடைய உடலிலும் சுமார் முதல் லிட்டர் வரை இரத்தம் உள்ளது. இதில் இரத்ததானத்தின் பொழுது எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு 350 மில்லி வரை மட்டுமே.

à  நாம் தானம் செய்யும் இரத்தம் 24 மணி நேரத்திற்குள்ளாக நமது உடலில் உற்பத்தியாகிவிடும் .

à  ஒருவர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம்.

à  இரத்ததானம் செய்ய 2௦ நிமிடங்களே ஆகும்.

à  இரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.சர்க்கரை நோய்,ஆஸ்துமாகாசநோய்பால்வினை நோய்தோல் நோய் பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் செய்யக்கூடாது .

à  கடந்த ஒரு வருடத்தில் மஞ்சள் காமாலை மற்றும் மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் சமீபத்தில் நோய் தடுப்பூசி போட்டவர்கள் இரத்ததானம் செய்யகூடாது.

à  மது அருந்தும் பழக்கமுடையவர்கள் அருந்திய 48 மணி நேரத்திற்கு பிறகு இரத்த தானம் செய்யலாம்.

à  இரத்ததானம் செய்பவர்கள் 24 மணி நேரத்திற்கு முன்பிருந்து எந்த மாத்திரை மருந்தும் சாப்பிடிருக்கக்கூடாது.

à  இரத்த தானம் செய்யும் நபர் காலையில் போதுமான உணவு சாப்பிட்டு வரவும்.