எண் 27/4, எம்.எஸ் காம்ப்ளக்ஸ், கே.ஆர்.ஈ. லே அவுட் , கல்லூரி சாலை, திருப்பூர் - 641 602.
+91 98430 60693/+91 98428 79560

உடல் உறுப்பு தானம்!

 


உடல் உறுப்புகள் கொடை அல்லது உடல் உறுப்புகள் தானம் என்பது நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடல் உறுப்பைத் தானமாக அளிப்பதாகும். இதை, ஒருவருடைய உடல் உறுப்புகளை இறந்த பின்னரும் வாழும் வாழ்க்கையைத் தருவது உடலுறுப்பு தானம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். உடலுறுப்புகளைத் தானமாகக் கொடுப்பது மதக் கோட்பாடுகளை மீறிய செயல் என்ற நிலை தற்போது மாறி வருகிறது. இருக்கும் வரை இரத்த தானமும், இறந்த பின்பு கண்தானமும் செய்வது மிகச் சிறப்பானது என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.


ஒருவர் உயிருடன் இருந்தாலும் அவருடைய மூளையின் பகுதி பாதிப்படைந்து செயலிழக்கும் நிலையில் அவருடைய இருதயம், சிறுநீரகம் போன்ற முக்கியமான சில உடல் உறுப்புகளை அவருடைய வாரிசுதாரர்கள் விரும்பினால் தானம் செய்யலாம். இந்த உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று சிலர் உயிர் வாழ முடியும் என்பதால் இந்த உடலுறுப்புகள் தானம் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

 

“உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?”
“ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.”

  

“இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”
“இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).”

 

“யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?”
“நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.”

“உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?”
“18 வயது முதல் 60 வயது வரை யில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிசமமாக முன் வந்து தானம் செய்யலாம்.”