எண் 27/4, எம்.எஸ் காம்ப்ளக்ஸ், கே.ஆர்.ஈ. லே அவுட் , கல்லூரி சாலை, திருப்பூர் - 641 602.
+91 98430 60693/+91 98428 79560

கண்-தானம்

கண் கொடை அல்லது கண் தானம் என்பது ஒருவர் இறப்புக்குப் பின்பு அவருடைய கண்களைத் தானமாக அளிப்பதாகும்.

தானமாகப் பெறப்பட்ட கண்கள் சோதனைகளுக்குப் பின்பு அதற்கான பாதுகாப்புகளுடன் வைக்கப்படுகிறது.

தானமாகப் பெறப்பட்ட கண்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக கண் வங்கிகள் செயல்படுகின்றன.

 

யார் கண் தானம் செய்யலாம்?

à  ஆண், பெண் இரு பாலரும், அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம்.

à  கண் கண்ணாடி அணிந்தவர்களும் செய்யலாம்.

à  இரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் கூட தானம் செய்யலாம்.

à  ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கூட தானம் செய்யலாம்.

à  உடலில் பிற உறுப்புகளில் புற்று நோய் வந்து இறந்தவர்களும் கூட தானம் செய்யலாம்.

à  யார் கண் தானம் செய்யக் கூடாது?

à  கொடிய தொற்று நோய்களான எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விசக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் வெறிநாய்க்கடி ஆகியவற்றால் இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்யக் கூடாது.

 

பயன்கள்

கண் தானம் செய்பவர்களினால் கருவிழி நோயினால் பார்வையிழந்த இரண்டு நபர்களுக்கு கருவிழி மாற்று சிகிச்சை அளிப்பதன் மூலம் பார்வை கிடைக்கிறது.