எண் 27/4, எம்.எஸ் காம்ப்ளக்ஸ், கே.ஆர்.ஈ. லே அவுட் , கல்லூரி சாலை, திருப்பூர் - 641 602.
+91 98430 60693/+91 98428 79560

மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம் !! மண் வளம் காப்போம் !!!

மரம் ஒரு வரம்:

பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.


மரம் நடுதல்

மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் நம்மால் முடிந்த அளவு நம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைக்கவும் , அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தியும் வருவோம்.


மக்கள் பயனுற செய்யும் மூன்று செயல்கள் நிலையான தர்மங்கள் ஆகும் :

மக்கள் தாகம் தீர்க்க கிணறு வெட்டுவது

அறியாமை அகற்றும் கல்வி புகட்டுவது

நிழல் தரும் மரம் நடுவது.

குறைந்தபட்சம் ஒரு விதையேனும் நம் எதிர்காலத்துக்காக விதைப்போம்!  செய்வீர்களா?